சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மலேசிய மாமன்னர்!

top-news
FREE WEBSITE AD


மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தனது இரண்டு நாள் அரசு முறை பயணத்தின் ஒரு பகுதியாக இன்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்குச் சென்றார், நாடாளுமன்ற அமர்வின் போது சென்ற  மலேசியாவின் முதல் மன்னர் சுல்தான் இப்ராஹிம் என்பது குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் சீ கியான் பெங் மன்னரை வரவேற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளைக் குறிப்பிட்டு, ‘'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 காலக்கட்டத்தில்  ​​பயணிகளுக்கு காஸ்வே மூடப்பட்டிருந்தாலும், நில எல்லைகள் முழுவதும் விநியோகப் பாதைகளைத் திறந்து வைக்க உதவுவதில் ஜோகூர் ஆட்சியாளராக சுல்தான் இப்ராஹிமின் நடவடிக்கையை சீ சுட்டிக்காட்டினார்.

அவரது வருகை சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான வலுவான உறவுகளுக்கு முன்னோடியாக இருக்கும் என்று தாம் நம்புவதாக சீ கூறினார்.

சுல்தான் இப்ராஹிம் மலேசியா திரும்புவதற்கு முன் உட்லண்ட்ஸ் நார்த் டெர்மினஸில் ஜோகூர்-சிங்கப்பூர் RTS இணைப்பின் முன்னேற்றம் குறித்த விளக்கமளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *