GE16 -ல் PH - UMNO கூட்டணி இன்னும் முடிவு செய்யப்படவில்லை! - அம்னோ பொதுச் செயலாளர்
- Shan Siva
- 18 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 17: அடுத்த பொதுத் தேர்தலில் (GE16) பக்காத்தான் ஹராப்பானுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதா இல்லையா என்பது குறித்து அம்னோ இன்னும் முடிவு செய்யவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் அசிரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.
பாரிசான் நேஷனல் தலைவரும் அம்னோ தலைவருமான அஹ்மத் ஜாஹித் ஹமிடி கடந்த ஆண்டு இரு கூட்டணிகளுக்கும் இடையிலான கூட்டாண்மை GE16 இல் தொடரும் என்று கூறியிருந்த வேளையில் டுசுக்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அசிரஃப் நேற்று நடந்த அம்னோ மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசியர்களின் நிலைத்தன்மை மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள அரசாங்கத்தை வலுப்படுத்துவதே அம்னோவின் தற்போதைய முன்னுரிமை என்று அவர் கூறினார்.
நாட்டை ஆட்சி செய்வதில் விரிவான அனுபவமுள்ள ஒரு கட்சியாக, அம்னோவின் முக்கிய முன்னுரிமை, மக்களுக்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவதாகும் என்று தெரிவித்தார்.
மக்களைப் பற்றி சிந்திக்காமல் அம்னோ ஒரு அரசியல் முடிவை எடுத்தால், GE16 இல் எங்களை மக்கள் தண்டிப்பார்கள் என்று அசிராஃப் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



