மலேசியர்களைக் கடத்திய இஸ்ரேலுக்கு எதிராகக் கோலாம்பூரில் போராட்டம்!
- Thinagaren Sanggaren
- 02 Oct, 2025
அக்தோபர் 2,
உதவிப் பொருள்களுடன் காசாவுக்குச் சென்ற 27 மலேசியர்களை இஸ்ரேல் கடற்படை கடத்தியிருப்பதால் இன்று காலை தலைநகரில் உள்ள அமேரிக்க தூதரகத்தின் முன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் தலைநகரில் உள்ள் Jalan Tun Razak சாலையில் அமைந்துள்ள அமேரிக்க தூதரகத்தின் வாசலில் கூடியதும் போராட்டக்காரர்களைக் காவல்துறை கட்டுபடுத்த முயன்றது. ஆனால் போராட்டக்காரர்களுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் இடையில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு மலேசியர்களைக் கடத்திய இஸ்ரேலுக்கு எதிராகத் தலைநகரில் போராட்டம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நண்பகல் 12 மணிக்கெல்லாம் கூட்டம் குவிய தொடங்கியது, பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் முன்பே, சாலையின் நடுவில் சென்று போராட்டம் நடத்தத் தொடங்கினர். நிலமையைக் கட்டுப்படுத்தவும் போராட்டத்தை ஒழுங்கப்படுத்தவும் காவல் துறை ஒரு சிலரைக் கைது செய்துள்ளது. அமேரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் நடவடிக்கையைப் போராட்டாக்காரர்கள் மேற்கொள்ள கூடாது என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



