கோயில்களை அவமதித்த கூட்டத்திற்கு எதிராக 138 புகார்கள்! – காவல்துறை
- Thinagaren Sanggaren
- 08 Feb, 2026
பிப்ரவரி 8,
நேற்றிரவு தலைநகர் SOGO வணிக வளாகத்தின் முன் கோயில்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியை நிறுத்தும்படிக் காவல்துறைக்கு 138 புகார்கள் கிடைத்ததால் காவல்துறை நடவடிக்கை எடுத்ததாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார். அரசு நிலங்களிலும் தனியார் நிலங்களிலும் கட்டப்பட்டிருக்கும் இந்துக் கோயில்களை அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டு இந்த பேரணி சர்ச்சைக்குரிய மத போதகர் ZAMRI VINOTH, மகாதீரின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் Haniff Khatri, கோயில்களை இடிக்க கனரக வாகனம் வாங்குவதற்காகப் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்த Tamim Dahri, Jamalee Bashah ஆகியோரின் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு எதிராக இந்த 138 புகார்கள் கிடைத்ததால் காவல்துறை முன்னெச்சிரிக்கை நடவடிக்கைக்காக 200 பாதுகாப்பு அதிகாரிகளுடன் போராட்டத்தைக் கட்டுப்படுத்தியதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார்.
இந்த பேரணிக்கு எதிராக மொத்தம் 138 புகார்களைக் காவல்துறை பெற்றதும் இந்த பேரணியை நிறுத்த காவல்துறை முடிவு செய்தது. ஆனால் பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இந்த பேரணி மேற்கொண்டிருந்தால் காவல்துறை எந்தவொரு கைது நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்காது என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார்.
பேரணியின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் கருத்துகளைக் கோஷமிட்டவர்களிடம் காவல்துறை அணுகி அவர்களிடம் பிற சமூகத்தையும் பிறர் நம்பிக்கையையும் இழிவுப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தினோம். ஆனாலும் ஒரு சிலர் கோஷமிட்டதால் காவல்துறை செய்துள்ளதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



