கோயில் ஹராம் போராட்டம்! திடுக்கிடும் தகவல்கள்! காவல்துறை அறிக்கை!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 8,

நேற்றிரவு தலைநகரில் கோயில்களுக்கு எதிரான ஆர்பாட்டப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் 23 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அரசு நிலங்களிலும் தனியார் நிலங்களிலும் கட்டப்பட்டிருக்கும் இந்துக் கோயில்களை அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டு இந்த பேரணி சர்ச்சைக்குரிய மத போதகர் ZAMRI VINOTH, மகாதீரின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் Haniff Khatri, கோயில்களை இடிக்க கனரக வாகனம் வாங்குவதற்காகப் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்த Tamim Dahri, Jamalee Bashah ஆகியோரின் தலைமையில் நேற்று தலைநகர் SOGO வில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

பேரணியின் உள்நோக்கம் தவறாகவும் இன மத ஆட்சியர் எனும் 3R சட்டத்திற்கு எதிராக இருப்பதால் உள்துறை அமைச்சும், காவல்துறையும் இந்த பேரணியைக் கைவிடும்படி சம்மந்தப்பட்ட அமைப்பினருக்கு வலியுறுத்தியது. அதே வேளையில் தலைநகர் SOGO வணிக வளாகத்தின் நிர்வாகமும் இந்த பேரணிக்கு எந்தவோர் ஆதரவையும் வழங்கவில்லை என்றும் வணிக வளாகத்தில் உள்ள வணிகக் கடைகளும் இந்த பேரணிக்கு எதிராகக் கருத்துகள் வெளியிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஆனாலும் இரவு 8 மணிக்குக் கூட்டம் கூடியதாகவும் கூட்டத்தில் பேசியவர்கள் மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் மத நம்பிக்கைகளைக் கேலி செய்யும் வகையிலும் கருத்துகள் வெளியிட்டதால் அவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. 

இரவு 11 மணியளவில் சர்ச்சைக்குரிய மத போதகர் ZAMRI VINOTH, மகாதீரின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் Haniff Khatri, கோயில்களை இடிக்க கனரக வாகனம் வாங்குவதற்காகப் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்த Tamim Dahri, Jamalee Bashah ஆகிய நால்வருடன் 19 ஆண்கள் 4 பெண்கள் என மொத்தம் 23 பேர் பேர் கைது செய்யப்பட்டனர். அதிகாலை 5 மணியளவில் ZAMRI VINOTH, கோயில்களை இடிக்க கனரக வாகனம் வாங்குவதற்காகப் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்த Tamim Dahri ஆகிய இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து மற்ற 21 பேரையும் காவல்துறை விடுதலை செய்துள்ளது. 

நேற்றைய கைது நடவடிக்கைகள் குறித்து இன்று காலை கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus, கோலாலம்பூர் காவல்துறை குற்றவியல் பிரிவு துணைத் தலைவர் ACP Gunalan, கோலாலம்ப்பூர் காவல்துறை பொது ஒழுங்கு கட்டுப்பாட்டு பிரிவு துணைத் தலைவர் ACP Zulkarnain ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். 

பேரணி குறித்து கடந்த வாரத்தில் DANG WANGI காவல் நிலையத்திற்கு அறிவிப்பு கடிதம் மட்டுமே பெற்றதாகவும் அந்த கடிதத்தைக் காவல்துறையினர் பெற்றுக்கொண்டோம். ஆனால் அந்த கடிதம் பேரணிக்குக் காவல்துறை முழு ஆதரவு வழங்கியதாகத் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus விளக்கமளித்தார். 

இந்த பேரணியின் உள்நோக்கம் குறித்து பலதரப்பட்ட கோணங்களில் காவல்துறை விசாரித்த பின்னரே இந்த பேரணியை நிறுத்தும்படி காவல்துறை சம்மந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்தியது. நேற்று இந்தியாவின் பிரதமர் மோடி மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டதற்கும் இந்த போராட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்பதைப் புலனாய்வுக் கண்டறிந்துள்ளது என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார். 

இந்த பேரணிக்கு எதிராக மொத்தம் 138 புகார்களைக் காவல்துறை பெற்றதும் இந்த பேரணியை நிறுத்த காவல்துறை முடிவு செய்தது. ஆனால் பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இந்த பேரணி மேற்கொண்டிருந்தால் காவல்துறை எந்தவொரு கைது நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்காது என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார். 

பேரணியின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் கருத்துகளைக் கோஷமிட்டவர்களிடம் காவல்துறை அணுகி அவர்களிடம் பிற சமூகத்தையும் பிறர் நம்பிக்கையையும் இழிவுப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தினோம். ஆனாலும் ஒரு சிலர் கோஷமிட்டதால் காவல்துறை செய்துள்ளதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார். 

நேற்றைய இந்த பேரணிக்காக மொத்தம் 200 காவல்துறையினர் அங்கு சூழ்ந்திருந்தோம். ஆனால் காவல்துறையினர் பேரணிக்கும், அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கிறோம். அதேவேளையில் மற்ற சமூகத்தின் நம்பிக்கையை இழிவுப்படுத்தும் நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள தயங்காது என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார். 

கைது நடவடிக்கையின் போது காவல் அதிகாரிகளை நோக்கி ஒரு சிலர் இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படாதீர்கள் என்றும் அவர்களைக் கைது செய்வதால் இஸ்லாத்திற்குத் துரோகம் செய்வதாகக் கருத்துகள் தெரிவித்துள்ளனர். இது குறிப்பிட்டு எந்தவொரு சமூகத்திற்கும் எதிரானக் கைது நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவில்லை என்பதில் காவல்துறை உறுதியாக உள்ளது என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார். மேலும் நேற்றைய கைது நடவடிக்கை என்பது அவர்களை அந்த பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்காகக் காவல்துறை மேற்கொண்ட தற்காலிகக் கைது என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus விளக்கமளித்தார். ஒவ்வொருவரையும் காவல்துறை கைது செய்யும் முன்னர் அவர்கள் பொதுமக்களிடம் பேசவும், காணொலிகள் பதிவு செய்யவும் நாங்கள் அனுமதித்தோம். மேலும் காவல் நிலையத்தில் அவர்களுக்கான தனி அறை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 23 பேரில் இருவரை மட்டுமே தடுப்புக் காவலில் வைத்து மற்றவர்களை விடுவித்து விட்டோம் என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார்.

இது சமயம், நம்பிக்கை, சமூகம் தொடர்பானது. இதில் எந்த பக்கம் தவறு இருக்கிறது என்பதைச் சட்டப்படி அணுகி அதற்கானத் தீர்வை நாம் வழங்க வேண்டும். அதை விடுத்து பொது ஒழுங்கைச் சீரழிக்கவும் பிற சமூகத்தின் நம்பிக்கையைக் கேளி செய்யவும், பொதுமக்களுக்கு இடையூறுகளை விளைவிக்க வேண்டாம் என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus வலியுறுத்தினார். 

சட்டத்தை மீறியிருப்பதாக நீங்கள் கருதினால் புகார் அளியுங்கள். அந்த புகாரைப் பெற்ற நாங்கள் தீவிரமாக விசாரிக்கவும் அதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் கால அவகாசத்தைக் கொடுங்கள் என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *