பேரணியில் கைது செய்தால் நாங்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்களா? காவல்துறை கேள்வி

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 8,

கோயில்களுக்கு எதிராக நேற்றிரவு போராட்டம் நடத்தியவர்களைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதற்குப் பின்னணியில் எந்தவொரு தனிப்பட்ட காரணங்களும் இல்லை என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus விளக்கமளித்தார். கைது நடவடிக்கையின் போது காவல் அதிகாரிகளை நோக்கி ஒரு சிலர் இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படாதீர்கள் என்றும் அவர்களைக் கைது செய்வதால் இஸ்லாத்திற்குத் துரோகம் செய்வதாகக் கருத்துகள் தெரிவித்துள்ளனர். இது குறிப்பிட்டு எந்தவொரு சமூகத்திற்கும் எதிரானக் கைது நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவில்லை என்பதில் காவல்துறை உறுதியாக உள்ளது என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார். மேலும் நேற்றைய கைது நடவடிக்கை என்பது அவர்களை அந்த பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்காகக் காவல்துறை மேற்கொண்ட தற்காலிகக் கைது என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus விளக்கமளித்தார். ஒவ்வொருவரையும் காவல்துறை கைது செய்யும் முன்னர் அவர்கள் பொதுமக்களிடம் பேசவும், காணொலிகள் பதிவு செய்யவும் நாங்கள் அனுமதித்தோம் என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார். 

பேரணியின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் கருத்துகளைக் கோஷமிட்டவர்களிடம் காவல்துறை அணுகி அவர்களிடம் பிற சமூகத்தையும் பிறர் நம்பிக்கையையும் இழிவுப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தினோம். ஆனாலும் ஒரு சிலர் கோஷமிட்டதால் காவல்துறை செய்துள்ளதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார். நேற்றைய இந்த பேரணிக்காக மொத்தம் 200 காவல்துறையினர் அங்கு சூழ்ந்திருந்தோம். ஆனால் காவல்துறையினர் பேரணிக்கும், அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கிறோம். அதேவேளையில் மற்ற சமூகத்தின் நம்பிக்கையை இழிவுப்படுத்தும் நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள தயங்காது என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *