இரு வாகனங்களை நசுக்கிய லாரி! TOL KOTA KEMUNING-கில் பரபரப்பு! 7 பேர் படுகாயம்!
- Thinagaren Sanggaren
- 11 Dec, 2025
டிசம்பர் 11,
கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி KOTA KEMUNING சுங்கச்சாவடியை மோதியதுடன் காத்திருந்த இரு வாகனங்களையும் மோதி விபத்துக்குள்ளானது. நேற்றிரவு 9.17 மணிக்கு விபத்துக் குறிப்பு பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்றதும் சம்பவ இடத்திற்கு 7 மீட்புப் படையினர் விரைந்து இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களையும் சுங்கச் சாவடி ஊழியர் ஒருவரையும் பாதுகாப்பாக மீட்டதாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
சுங்கச்சாவடியின் அருகில் நிகழ்ந்த விபத்தில் Perodua Bezza , Proton Wira ஆகிய இரு வாகனங்களிலிருந்த பெண்கள் உட்பட 6 உள்ளூர் நபர்களும் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில் தற்போது அவர்கள் மருத்துவமனையில் அபாயக் கட்டத்தைத் தாண்டி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



