அதிகாரியின் கையை வெட்டிய இளைஞர் கைது! நீதிமன்றம் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 28,

கோம்பாக்கில் 20 வயது இளைஞரின் கையை வெட்டிய வழக்குடன் தொடர்புடையதாக நம்பப்படும் 32 வயது உள்ளூர் ஆடவர் இன்று Selayang Sesyen நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். கடந்த டிசம்பர் 14 அதிகாலையில் தன் தம்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட போக்குவரத்து அதிகாரியைக் கடுமையாகத் தாக்கியதுடன் 20 வயது அதிகாரியின் கையை வெட்டிய 32 வயது ஆடவருடன் 8 பேர் கடந்த டிசம்பர் 16 கோம்பாக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

சம்பவத்தின் போது பதிவான CCTV காட்சிகளின் அடிப்படையில் இன்று Selayang Sesyen நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது தன் மீதானக் குற்றத்தை மறுத்த 32 வயது ஆடவர் மேல்விசாரணையுடன் ஜாமின் கோரிக்கையும் விடுத்தார். சம்பவ இடத்தில் இருந்தவர்களின் சாட்சிகளைக் காவல்துறையினர் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட 32 வயது உள்ளூர் இளைஞருக்கு  12,000 ஜாமின் வழங்குவதுடன் நீதிமன்ற விசாரணையை அடுத்த ஜனவரி 30 தொடர்வதாக Selayang Sesyen நீதிமன்ற நீதிபதி Lailatul Zuraidah Harron உத்தரவிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *