1 MDB விவகாரம் - தெங்கு ஜஃப்ருல், லிம் குவான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்! - பொது கணக்குக் குழு அழைப்பு!
- Shan Siva
- 06 Nov, 2024
கோலாலம்பூர்: முன்னாள்
நிதி அமைச்சர்களான தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் மற்றும் லிம் குவான்
எங் ஆகியோரை 1எம்டிபி சொத்து மீட்பு குறித்த விசாரணைக் குழுவின் முன் சாட்சியம்
அளிக்க பொதுக் கணக்குக் குழுவான பிஏசி அழைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஏசி தலைவர்
டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின், கருவூலச் செயலர்
டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கன் மற்றும் 1எம்டிபி சொத்து மீட்பு பணிக்குழுவின்
தலைவர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி ஆகியோர் குழுவிடம் தங்கள் அறிக்கைகளை
அளித்துள்ளனர்.
நடவடிக்கைகளை
முடிக்க, தற்போது முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக
இருக்கும் தெங்கு ஜஃப்ருல் மற்றும் அவரது முன்னோடி லிம் ஆகியோர்
அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
முன்னாள்
கருவூலச் செயலர் டத்தோ அஸ்ரி ஹமிடான் மற்றும் சட்ட நிறுவனமான ரோஸ்லி டஹாலன் சரவணன்
(ஆர்.டி.எஸ்) பார்ட்னர்ஷிப் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று அவர்
கூறினார்.
ஆடிட்டர்
ஜெனரலின் அறிக்கை 1MDBயின் நிதிப்
பொறுப்புகள் தொடர்பான சிக்கல்களைக் கோடிட்டு காட்டிய பிறகு, PAC அதன் விசாரணையைத் தொடங்கியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *