பிப்ரவரி 9 முதல் RM100 SARA உதவித்தொகை! - அன்வார்-
- Shan Siva
- 05 Jan, 2026
கோலாலம்பூர், ஜான் 5: 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 22 மில்லியன் குடிமக்களுக்கு, வரும் பிப்ரவரி 9 முதல் RM100 மதிப்பிலான SARA உதவித்தொகை, அவர்களது MyKad வழியாக வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவின் அழுத்தத்தை
குறைப்பதற்காகவும், பண்டிகைக் கால தயாரிப்புகளுக்காகவும்
இந்த உதவி வழங்கப்படுவதாக அவர் கூறினார். இன, மத
வேறுபாடின்றி அனைத்து வயது வந்த மலேசியர்களுக்கும் இந்த உதவி வழங்கப்படும் எனவும்
தெரிவித்தார்.
பிரதமர் துறையின் மாதாந்திர கூட்டத்தில்
புத்தாண்டு உரையாற்றிய அன்வார், இந்த உதவி ரமலான் தயாரிப்புகளுக்கும்,
சீன புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் உதவும்
என்று கூறினார்.
ஜனவரி 20 முதல், STR
முதல் கட்டமாக RM500 வரை
வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 23 அன்று, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 22 milliyan மலேசியர்களுக்கு RM100 SARA கடன் வழங்கப்படும் என அன்வார் அறிவித்திருந்தார். இந்த தொகை, நாடு முழுவதும் உள்ள 7,300-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சில்லறை கடைகளில், அடிப்படை அத்தியாவசிய பொருட்களை வாங்க டிசம்பர் 31 வரை MyKad மூலம் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



