பாலஸ்தீன மக்களுக்கு RM 100 மில்லியன் - அன்வார் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 25: காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவ மலேசியா கூடுதலாக  10 கோடி ரிங்கிட் உதவியை வழங்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம்  அறிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காசா மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட மானியத்தை விடக் கூடுதலாக இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். "இது வெறும் ஆரம்பம் தான்," என்று பேரணியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் கூறினார்.

டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற காசாவுக்கான ஒற்றுமை பேரணியில் பேசிய பிரதமர், மலேசியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் காசாவை மீண்டும் கட்டியெழுப்ப உதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காசா மக்களுக்கு உணவு மற்றும் உதவியை மறுக்கும் இஸ்ரேலியர்களின் நடவடிக்கைகள் "மனிதர்களின் செயல்கள் அல்ல, அவர்கள் விலங்குகள்" என்று அன்வார் கூறினார்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் அட்டூழியங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அழுத்தம் கொடுப்பதில் முஸ்லிம்களும் சர்வதேச சமூகமும் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 உலகிற்கு ஒரு முன்மாதிரியாகச் செயல்படக்கூடிய ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப, தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்தி, பிரிவினையை நிராகரிக்குமாறு மலேசியர்களை அன்வார் வலியுறுத்தினார்.

"மலேசியா உங்களைத் தனியாக விடாது" என்று அவர் காஸா மக்களுக்கு செய்தியாகத் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *