1070 பேர் கைது! RM 50 லட்சம் பறிமுதல்! மோசடி ஆன்லைன் கால்சென்டர்கள் முடக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,  ஜன 6: கடந்த ஆண்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில், 97 ஆன்லைன் மோசடி கால்சென்டர்கள்  மூடப்பட்டதுடன், RM50 லட்சத்துக்கும் மேற்பட்ட ரொக்கம் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வணிக குற்ற புலனாய்வுத்துறை துறை மற்றும் புக்கிட் அமான் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளில், 600 உள்ளூர்வாசிகள், 470 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 1,070 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 2,845 தொலைத்தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக நகர காவல் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் கறினார். 

போலி வேலைவாய்ப்புகள், இல்லாத கிரிப்டோ முதலீட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. வீடுகளை சட்டவிரோதமாக கால்செண்டர்களாக மாற்றி இந்த மோசடிகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் குற்றவியல் சட்டம் பிரிவு 120B(2) (குற்றச் சதி) கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். வெளிநாட்டவர்கள் மீது குடிநுழைவுச்சட்டத்தின் கீழும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, பணப் பரிவர்த்தனைக்கு முன் அதிகாரிகளிடம் சரிபார்க்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சந்தேகத்திற்கிடமான தகவல்களை 03-2115 9999 என்ற ஹாட்லைன் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *