டாக்ஸி ஓட்டுநர்கள் நலனுக்காக 10 மில்லியன்! - அன்வார் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 3: நாடு முழுவதும் உள்ள வாடகைக்கார் ஓட்டுநர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அரசாங்கம் கூடுதலாக 10 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது என பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பயணிகளுக்கு மலேசியர்களின் பண்பான குணத்தையும் நன்னடத்தையையும் பிரதிபலிக்கும் முன்னணிப் பணியாளர்களாக வாடகைக்கார் ஓட்டுநர்களை அரசாங்கம் பாராட்டுவதையே இந்த நிதி ஒதுக்கீடு பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

ஒரு வாடகைக்கார் ஓட்டுநர் முரட்டுத்தனமாகவும் கடுமையாகவும் நடந்துகொண்டால், அது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்காது என்பது தெரியும்.

மலேசியர்கள் மிகவும் பண்பானவர்கள், மரியாதையானவர்கள் மற்றும் அன்பானவர்கள் என்பதை சுற்றுலாப் பயணிகள் காண்கிறார்கள் என்று அவர் கூறினார்.

 இந்த நல்ல வரவேற்பின் காரணமாக, வாடகைக்கார்களுக்காக பிரத்யேகமாக கூடுதலாக 10 மில்லியன் ரிங்கிட்டை வழங்க இன்று தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக டத்தாரான் மெர்டேக்காவில் மடானி தேசிய வாடகைக்கார் சீர்திருத்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தபோது அவர் கூறினார்.

நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், இந்த நிதியானது தற்போதுள்ள உதவித் திட்டங்கள் மூலம், ஓட்டுநர்களுக்கான நல ஆதரவு, வாகன உரிமை உதவி மற்றும் பயிற்சித் திட்டங்களை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *