கிள்ளான் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது! - சிலாங்கூர் போலீஸ் அதிரடி
- Shan Siva
- 07 Oct, 2024
ஷா ஆலம்: கிள்ளான், பாண்டமாரானில் அண்மையில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 10 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் 38 வயதுடையவர் என்றும், அவர் முன்பு கொலை மற்றும் கொலை முயற்சிக்காகவும் விசாரிக்கப்பட்டவர் என்றும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.
மற்றொரு கூட்டாளி 13 கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று அவர் கூறினார்
சந்தேக நபர்கள் மந்தின், நெகிரி செம்பிலான் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் கைது செய்யப்பட்டனர்.
அக்டோபர் 3 மற்றும் அக்டோபர் 7 ஆம் தேதிக்கு இடையில், 23 முதல் 46 வயதுடைய ஒன்பது ஆண்களையும் ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் ஆபத்தானவர்கள் என்று குறிப்பிட்ட அவர், அவர்கள் கடந்த ஆண்டு முதல் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் ஆயுதமேந்திய கொள்ளைகளை தீவிரமாகச் செய்து வருவதாக நம்பப்படுகிறது என்று ஹுசைன் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை காலை 5 மணியளவில் நடந்த சம்பவத்தில், அக்கும்பல் RM600,000 பணம், மதிப்புமிக்க தெய்வச் சிலைகள் மற்றும் நகைகளுடன், வீட்டில் இருந்த 37 வயது நபரை கத்தியால் தாக்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *