10 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிரந்தர நிலம் வழங்கியது சிலாங்கூர் அரசு!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 17,

சிலாங்கூரில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் நிரந்தரமான அதன் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும் என்கிற சிலாங்கூர் அரசின் முயற்சியில் முதற்கட்டமாக 10 தமிழ்ப்பள்ளிகளுக்குச் சிலாங்கூர் அரசின் நிரந்தர நிலம் வழங்கப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் V. Papparaidu தெரிவித்தார். சிலாங்கூரில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் நிலம் இல்லாதவற்றை அடையாளம் கண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக V. Papparaidu தெரிவித்தார். 

தெலோக் பாங்லிமா காராங் தமிழ்ப்பள்ளி, ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி, சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, சீஃபீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, PJS 1 தமிழ்ப்பள்ளி, காஜாங் தமிழ்ப்பள்ளி, பெர்சியாரான்  ராஜா மூடா மூசா தமிழ்ப்பள்ளி, Fes செர்டாங் தமிழ்ப்பள்ளி, துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி என மொத்தம் 10 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. 

இது சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் திட்டமாகவே இருந்தாலும் மெந்திரி பெசார் அமிருடின் ஷாரிக்கும், கல்வி அமைச்சிற்கும், மாநிலக் கல்வி இலாகாவுக்கும், மாநில நில விவகாரத் துறைக்கும், பள்ளி தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி நிர்வாக வாரியத்திற்கும் என முக்கியமாக அனைத்து நல்லுள்ளங்களுக்கும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் V. Papparaidu நன்றியைத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *