வீடுகள் தீக்கிரை – 40 பேர் பாதிப்பு
- Surendran Sumdraraj
- 27 Mar, 2026
பத்து பெரிங்கி, மார்ச் 27-
Batu Feringghi பகுதியில் உள்ள கம்போங் டின் மாம்போவில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், இரு மாடி கொண்ட அரை நிரந்தர வகை 11 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
காலை சுமார் 11 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, வேகமாக பரவி பல வீடுகளைச் சூழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இந்த விபத்தில் சுமார் 40 பேர் பாதிக்கப்பட்டதாக ஆரம்ப தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலான குடியிருப்பாளர்கள் உடமைகள் எதையும் காப்பாற்ற முடியாமல், அணிந்திருந்த உடையுடன் மட்டுமே வெளியேறியுள்ளனர். முக்கிய ஆவணங்களும் பலரால் பாதுகாக்க முடியாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Jabatan Bomba dan Penyelamat Malaysia (JBPM) பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ், காலை 11.29 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்ததாகத் தெரிவித்தார்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



