நீர் விளையாட்டு நிகழ்ச்சியின் போது நீரில் மூழ்கி 11 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 8:

நீர் விளையாட்டு நிகழ்ச்சியின் போது நீரில் மூழ்கி 11 வயது பள்ளி மாணவர் பரிதாபமாக  இறந்தார்.இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை சுங்கை பீசியில் உள்ள தேசா தாசிக் விளையாட்டு வளாக நீச்சல் குளத்தில் நடந்தது.
அந்த மாணவர் கோலாலம்பூரில் உள்ள ஒரு தேசிய பள்ளியில் ஒருங்கிணைந்த சிறப்பு கல்வி திட்டத்தை (PPKI) சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில் போலீசாருக்கு ஒரு அறிக்கை கிடைத்ததை கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் உறுதிப்படுத்தினார்.பாதிக்கப்பட்டவர் மலேசியாவின் சான்ஸலோர் துவாங்கு முஹ்ரிஸ் பல்கலைக்கழக கெபாங்சான் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றார்.இந்நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *