இந்தியா வரும் 114 ரபேல் விமானங்கள்!
- Muthu Kumar
- 13 Feb, 2026
இந்திய வான்படையைப் பலப்படுத்த 114 ரஃபேல் போர்விமானங்களை வாங்க இந்தியாவின் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் முதற்கட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது. இதன் மூலம் பழைய விமானங்களுக்கு மாற்றாக 42 ஸ்குவாட்ரான் இலக்கை இந்திய வான்படை எட்டும்.
'மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் இந்த விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளன. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த போர்விமானங்கள் எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வியூக வலிமையை சர்வதேச அளவில் உயர்த்தும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



