11 மலேசியர்கள் இஸ்ரேலியப் படையினரால் தடுப்பு வைப்பு!
- Shan Siva
- 02 Oct, 2025
கோலாலம்பூர், அக் 2: காசாவிற்கான குளோபல் சுமுத் புளோட்டிலா மனிதாபிமானப் பணியில் பங்கேற்ற பதினொரு மலேசியர்களை இஸ்ரேலியப் படைகள் தடுத்து வைத்துள்ளன.
இன்று காலை 7.50 மணி நிலவரப்படி ஐந்து வெவ்வேறு கப்பல்களில் இந்த தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹியோ கப்பலில் ஹெலிசா ஹெல்மி மற்றும் நூர் ஹஸ்வானி அபிகா ஹெல்மி கைது
செய்யப்பட்டனர்.
க்ராண்டே ப்ளூ கப்பலில் நொர்ஃபராஹின் ரோம்லி (பரா லீ) மற்றும் டேனிஷ் நஸ்ராம் முராட்டும், ஹூகா கப்பலில்
நூர் பஸேலா மத் தாஹிலும் கைது செய்யப்பட்டனர்.
சீரியஸ் கப்பலில் ஹைகல் அப்துல்லா, முஅஸ் ஸைனல், சூல்பாத்லி கைருடின், ருஸ்யிதி ரம்லியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆல்மா கப்பலில் இலியா பால்கிஸ், மூசா நுவைய்ரி, சூல் ஐதீல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பணியில்
இருந்த ஐந்து மலேசியர்களுடன் சுமுத் நுசந்தாரா கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு
துண்டிக்கப்பட்டுள்ளது.
எஸ்ட்ரெல்லா கப்பலில் பி.யூ. ரஹ்மத், நோர்ஹெல்மி,
மொஹ்த் அஸ்மாவி, நோராஸ்மான் ஆகியோர் இருந்தனர்.
மிகெனோ கப்பலில் நூருல் ஹிதாயா மொஹ்த் அமின் (ஆர்டெல் ஆர்யானா) தொடர்பு
துண்டிக்கப்பட்டபோது இருந்ததாக கடைசிக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



