1எம்டிபி தொடர்புடைய 12 பிரபல ஓவியங்கள் மலேசியாவுக்கு திரும்ப கொண்டுவரப்படுகின்றன

top-news

கோலாலம்பூர், டிச. 22-

1மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட் (1எம்டிபி) ஊழல் வழக்குடன் தொடர்புடைய 12 உயர்மதிப்பு ஓவியங்கள் தற்போது மலேசியாவுக்கு திரும்ப கொண்டுவரப்படும் பணியில் உள்ளன. இந்த ஓவியங்கள் அமெரிக்க நீதித்துறையுடனான (யுஎஸ் டிஓஜே) ஒப்பந்தத்தின் மூலம் திரும்பப் பெறப்படுகின்றன.

இந்த ஓவியங்கள் மொத்தம் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (தோராயமாக 140 மில்லியன் ரிங்கிட்) மேல் மதிப்புடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஓவியர்களான பாப்லோ பிகாசோ, ஜோன் மிரோ, ஹென்றி மாடிஸ் உள்ளிட்டோரின் படைப்புகள் இதில் அடங்கும். இவை முன்னாள் 1எம்டிபி வழக்கறிஞர் ஜாஸ்மின் லூவுக்கு சொந்தமானவை என்றும், கிறிஸ்டீஸ், சோத்பீஸ் ஏல வீடுகளில் வைக்கப்பட்டிருந்தவை என்றும் தெரியவந்துள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) சிறப்பு செயல்பாட்டுப் பிரிவு மூத்த இயக்குநர் டத்தோ முகமட் ஜம்ரி ஜைனுல் அபிடின் கூறுகையில், இந்த ஓவியங்களை சாதாரணமாக கொண்டுவர முடியாது. அவற்றின் தரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். தற்போது லாஜிஸ்டிக்ஸ் செலவுகளை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இரு தரப்பும் இணைந்து ஓவியங்கள் பாதுகாப்பாக மலேசியா வந்தடைய ஏற்பாடுகள் செய்து வருகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *