வாட்ஸ்அப்பில் தங்களின் ஆபாசப் படங்களை விற்ற் 12 வயது சிறுமிகள்! அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

top-news
FREE WEBSITE AD

கோலாம்பூர், ஆக 19: வாட்ஸ்அப்பில் தங்கள் ஆபாசப் படங்களை விற்பனை செய்த 12 வயது சிறுமிகள் நான்கு பேர் கொண்ட குழுவை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சில சிறுமிகள் தங்கள் படங்களை விற்பனை செய்வதன் மூலம் பெற்றோரை விட அதிக பணம் சம்பாதிப்பதால், பள்ளியை விட்டு வெளியேற முடிவு செய்ததாகவும் சைஃபுதீன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

பல அமைச்சகங்கள் பல நிறுவனங்களின் ஒத்துழைப்பினால்,அவர்களின் செயல்பாடுகள் வெளிப்பட்டதாகவும், அவர்களுக்கு நன்றி என்றும் அவர் கூறினார்.
அவர்களில் நால்வரும் வெறும் 12 வயதுடையவர்கள். அவர்கள் பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வாட்ஸ்அப் குழுவை வைத்திருந்தனர் என்று சைஃபுதீன் கூறினார்,
இந்த வழக்கை புக்கிட் அமானின் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் விசாரணைப் பிரிவு கையாள்வதாக சைஃபுதீன் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *