125 வெளிநாட்டினர் கைது! – குடிநுழைவுத்துறை அதிரடி
- Shan Siva
- 11 Sep, 2025
கோலாலம்பூர், செப் 11: இன்று அதிகாலை ஸ்தாப்பாக்கின் டானாவ் கோத்தாவில் உள்ள 19 மாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் மலேசிய குடிநுழவுத் துறை 125 சட்டவிரோத குடியேறிகளைக் கைது செய்தது.
கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை
இயக்குநர் வான் முகமது சௌபி வான் யூசோஃப், இந்த நடவடிக்கையின் விளைவாக 16 முதல் 70 வயதுக்குட்பட்ட 81 ஆண்கள் மற்றும் 43 பெண்கள் கைதுசெய்யப்பட்டதோடு, ஒரு குழந்தையும்
மீட்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
கைது
செய்யப்பட்டவர்களில் 79 மியன்மார் குடிமக்கள், 25 இந்திய பிரஜைகள், 14 பேர் பாகிஸ்தான் பிரஜைகள், இந்தோனேசியாவைச் சேர்ந்த 12 பேர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஐவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத
குடியேறிகள் என்று நம்பப்படும் வெளிநாட்டினர் இந்தப் பகுதியில் ஆதிக்கம்
செலுத்துவதாக பொதுமக்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக
வான் முகமது சௌபி கூறினார்.
குடிநுழைவுச்
சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(c)
மற்றும் பிரிவு 15(4) இன் கீழ் விசாரணைகள் நடத்தப்படுகின்றன!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



