ETS சேவைக்கு 12,600 கூடுதல் டிக்கெட்டுகள் – நள்ளிரவில் விற்பனை தொடக்கம்
- Tamil Malar (Reporter)
- 10 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 10-
புத்தாண்டு சீனப் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பைச் சமாளிக்கும் நோக்கில், Keretapi Tanah Melayu Berhad (KTMB) நிறுவனம், KL சென்ட்ரல்–ஜொகூர் பாரு சென்ட்ரல்–KL சென்ட்ரல் இடையிலான மின்சார ரயில் (ETS) சேவைக்கு கூடுதலாக 12,600 டிக்கெட்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகள் நாளை (11 பிப்ரவரி) நள்ளிரவு 12.15 மணிமுதல் விற்பனைக்கு வரும்.
போக்குவரத்து அமைச்சர் ஆந்தனி லோக் கூறுகையில், பிப்ரவரி 13 முதல் 22 வரை உள்ள காலகட்டத்திற்காக முன்பே ஒதுக்கப்பட்ட 131,879 டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்ததை அடுத்து, இந்த கூடுதல் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். புத்தாண்டு சீனப் பண்டிகை காலத்தில் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அதிக அளவில் ரயில் சேவையைப் பயன்படுத்துவதால், தேவையைப் பூர்த்தி செய்வது அவசியமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



