6 லாரிகள் உட்பட 12 வாகனங்கள் விபத்து! ஒருவர் பலி! 5 பேர் காயம்!
- Thinagaren Sanggaren
- 24 Aug, 2025
ஆகஸ்ட் 24,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 12 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 6 பேர் காயமடைந்தனர். காலை 7.30 மணிக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் மூவார் அருகில் இந்த விபத்து ஏற்பட்டதாக மூவார் மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார். விபத்துக் குறித்தான தகவல் கிடைக்க பெற்றதும் மீட்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தது பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாகவும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களைத் தற்காலிகமாக நிறுத்தியதாகவும் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார்.
48 வயதான ஆடவர் செலுத்திய லாரி பழுதடைந்து நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாகவும் பின்னிருந்து வந்த மற்றொரு லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும் பின்னால் வந்த மற்ற வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார். இந்த விபத்தில் 6 லாரிகள், கார்கள், 1 வேன் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 6 பேர் காயமடைந்திருக்கும் நிலையில் 39 வயது லாரி ஓட்டுநர் உயிரிழந்திருப்பதாகவும் மூவார் மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz உறுதிப்படுத்தினார். விபத்துத் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மூவார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூவார் மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



