பிரிக்ஃபீல்ட்ஸ் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 12 பேரிடம் வாக்குமூலம்!
- Shan Siva
- 17 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 17: கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று
நடந்த 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கொள்ளை சம்பவம் குறித்த விசாரணையில்,
காவல்துறையினர் 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு
செய்துள்ளனர்.
சம்பவ நடந்த இடத்திலும்
அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளையும்
காவல்துறை ஆய்வு செய்து வருவதாக ஹூ கூறினார்.
தப்பிச் சென்ற பிறகு
சந்தேக நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய காவல்துறை பணியாற்றி வருகிறது என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஜாலான் துன் சம்பந்தன் சாலையில் உள்ள
நகைக்கடையில் நடந்த கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறை தேடி வருவதாக
கோலாலம்பூர் காவல் நிலையத் தலைவர் ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார். இந்தச் சம்பவம்
காலை 11 மணிக்குப் பதிவாகியுள்ளது.
இரண்டு
கைத்துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்தியிருந்த அந்த நபர்கள், சுமார் 15 கிலோ எடையுள்ள 21 தட்டு தங்கத்துடன் தப்பிச்
சென்றதாக அவர் கூறினார். மேலும், கடையின் பாதுகாப்பு
ஊழியரிடமிருந்து ஒரு ஷாட்கன் மற்றும் ஒரு தோட்டாவையும் அவர்கள் திருடிச் சென்றனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



