பண்டார் பாரு பாங்கி ரமலான் சந்தையில் சோதனை – 13 இந்தோனேசியர்கள் கைது
- Surendran Sumdraraj
- 24 Feb, 2026
கோலாலம்பூர், பிப்.24-
பண்டார் பாரு பாங்கி, செக்க்ஷன் 13, லாமான் நியாகா கம்யூனிட்டி பகுதியில் நேற்று நடைபெற்ற ரமலான் சந்தையில் மலேசிய குடிநுழைவு துறை திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
மாலை 3.55 மணியளவில் தொடங்கிய இந்த சோதனையில், அந்த இடத்தில் இருந்த மொத்தம் 720 பேரிடம் ஆவணங்கள் மற்றும் அடையாளச் சான்றுகள் சரிபார்க்கப்பட்டன. விரிவான பரிசோதனையின் பின்னர், சட்டப்படி அனுமதி இல்லாமல் நாட்டில் தங்கியிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 13 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு ஆண்களும், ஏழு பெண்களும் அடங்குவர். இவர்களின் வயது 18 முதல் 40 வயது வரையில் உள்ளது.
குடிநுழைவு துறையின் துணை தலைமை இயக்குநர் (செயற்பாடு) டத்தோ லோக்மான் எபெண்டி ரம்லி வெளியிட்ட அறிக்கையில், கைது செய்யப்பட்டவர்கள் குடிநுழைவு சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(c) மற்றும் 15(1)(c) கீழும், குடிநுழைவு விதிமுறைகள் 1963 இன் விதி 39(b) கீழும் குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுவதாகக் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



