பத்து பகாட்டில் நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் மரணம்
- Shan Siva
- 13 Aug, 2025
பத்து பஹாட், ஆக 13: நேற்று காலை யோங் பெங்கின் பாரிட் யானியில் உள்ள
ஒரு நீர் தேக்கத்தில் நான்கு நண்பர்களுடன் நீந்திக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்தான்.
சிறுவன்
வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரமாக மீண்டும் மேலே வரவில்லை என்பதை அவனது நண்பர்கள்
உணர்ந்ததை அடுத்து, கிராமவாசிகளிடம் அவர்கள் உதவி கேட்டதாக பத்து
பஹாட் காவல்துறைத் தலைவர் ஷாருலானுவார் முஷாதத் அப்துல்லா சானி இன்று ஓர்
அறிக்கையில் தெரிவித்தார்.
கிராமவாசிகள் பள்ளமான
அந்த நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் மயக்கமடைந்த பதின்மவயது ஆடவரைக் கண்டனர். ஆனால் அவரை உயிர்ப்பிக்கும்
முயற்சிகள் தோல்வியடைந்தன.
சுல்தானா நோரா
இஸ்மாயில் மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில், மரணத்திற்கான காரணம் நீரில் மூழ்கியதே என்று
உறுதிப்படுத்தப்பட்டது.
போலீசார் இந்த
வழக்கை திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



