RM 1.33. மில்லியன் மதிப்புள்ள போலி மருத்துவ உபகரணங்கள் பறிமுதல்
- Shan Siva
- 10 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 10: போலியான மருத்துவ உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் பொருட்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் RM1.33 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். உள்நாட்டு வர்த்தகம் மற்றும் அமலாக்கப் பிரிவு, Johor Bahru நகரில் உள்ள ஒரு கிடங்கு மற்றும் பொதியிடும் நிலையத்தில் இந்த சோதனையை நடத்தியது.
ஒரு வர்த்தகச் சின்னத்தின் உரிமையாளரிடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, Putrajaya கிளை அமலாக்க அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அமலாக்க இயக்குநர் Azman Adam தெரிவித்தார்.
அந்தக் கட்டிடத்தில் பல்வேறு சுகாதார பரிசோதனை உபகரணங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அவை போலியானவை என சந்தேகிக்கப்படுவதுடன், நுகர்வோருக்கு விநியோகம் செய்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது, என்று Azman Adam கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில்: தானியங்கி இரத்த அழுத்தம் அளவிடும் கருவிகள், நெபுலைசர்கள், டிஜிட்டல் வெப்பமானிகள், டிஜிட்டல் எடை அளவைகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள், இரத்த சர்க்கரை அளவிடும் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு மாதிரிகள் அடங்கும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உதவ, அந்த இடத்தின் மேலாளர் ஒருவ்ரையும் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



