குண்டர் கும்பலைச் சேர்ந்த 13 இந்திய இளைஞர்கள் சொஸ்மாவில் கைது! – நீதிமன்றம் விசாரணை!
- Thinagaren Sanggaren
- 08 Oct, 2025
அக்தோபர் 8,
பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 13 இந்திய இளைஞர்களின் சொஸ்மா தடுப்புக் காவலை நீட்டிக்கும்படி இன்று SEPANG Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த செப்டம்பர் 11 GENG CAPTAIN PRABA எனும் கும்பலைச் சேர்ந்த 13 இந்திய இளைஞர்களைத் தேசிய பாதுகாப்பு ஆணையம் கைது செய்ததாகத் தேசிய காவல்துறை தலைவர் Datuk Seri Mohd Khalid Ismail தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 13 பேரும் 20 முதல் 37 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் ஜெஞ்ஜாரோம் பகுதியில் உள்ள காட்டுக்குள் தங்கி பல்வேறு குற்றச்சம்பவங்களில் கடந்த 2 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட 27 வயது M Lavindran, 37 வயது M Meganathan, 20 வயது M Tinesh, 29 வயது Utayaragu, 31 வயது தேனிஷ், 19 வயது S Jeevan, 28 வயது J Sangaranarayanan, 35 வயது P Joshua, 25 வயது M Devindran, 29 வயது M Nokarju, 22 வயது S Tivagaran, 26 வயது S Logeswaran 36 வயது D Vijayakumarஆகிய 13 இளைஞர்களின் ஜாமின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பதாகவும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட 13 பேர் சம்மந்தப்பட்ட மேலதிக விசாரணையை உயர்நீதிமன்றத்தில் அடுத்த மாதம் நவம்பர் 10 மேற்கொள்ளப்படும் என்றும் கைது செய்யப்பட்டிருக்கும் 13 பேருடன் அவர்களின் குடும்பத்தினர் சந்திக்க 10 நிமிடங்கள் வழங்குவதுடன் வழக்கறிஞர் இல்லாமல் சந்திக்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. GENG CAPTAIN PRABA எனும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் மேலும் 30 பேரைக் காவல்துறை தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



