மந்திரி பெசார் அமினுடின் ஹருனுக்கு எதிராக UMNO–BN ஆதரவு வாபஸ்

top-news
FREE WEBSITE AD

நெகிரி செம்பிலான், ஏப். 27-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், UMNO மற்றும் Barisan Nasional (BN) கூட்டணி இன்று முக்கியமான முடிவை அறிவித்துள்ளது. மாநில முதல்வராகவும், PKR கட்சியின் சிகாமட் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருனுக்கு வழங்கப்பட்ட ஆதரவை அவர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

இந்த முடிவை மாநில UMNO–BN தலைவர் டத்தோ ஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் அறிவித்தார். அவர் கூறுகையில், தற்போதைய "அடாத்" தொடர்பான பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால், இதை எதிர்கொள்ள ஒருமித்த நிலைப்பாடு அவசியமாகியுள்ளது என்றார். இதனை முன்னிட்டு, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள UMNO–BN சார்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் விளக்கினார்.

மேலும், இந்த முடிவை அதிகாரப்பூர்வமாக மாநில சட்டமன்றத்தின் தலைவரான டத்தோ எம்.கே. இப்ராஹிம் அப்துல் ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நடவடிக்கை மாநில அரசியல் நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *