கிள்ளான் கம்போங் பாப்பானில் 14 பேர் கைது

top-news

செய்தி – வெற்றி மைந்தன்

ஷா ஆலம், நவ. 14-

கிள்ளான், ண்டமாரானில் உள்ள கம்போங் பாப்பான் பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை நடைபெற்ற வீடுகள் காலி செய்யும், இடிப்பு நடவடிக்கைகளின் போது, பொது ஊழியர்களின் பணிகளை தடுத்ததாக சந்தேகிக்கப்படும் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாஸேலி கஹார் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கிராம மக்கள் இல்லை, மாறாக சம்பவ இடத்தில் இருந்த அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவித்தார்.

நவம்பர் 13 ஆம் தேதி, இடிப்பு உத்தரவை செயல்படுத்திய தரப்பினரால் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 11 ஆண்கள், மூன்று பெண்கள் அடங்குவர். ஆனால், ஆரம்ப விசாரணைக்குப் பிறகு, பொது ஊழியர்களின் பணிகளை தடுத்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186 இன் கீழ் அனைவரும் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்  என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *