15,081 PR விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன! - உள்துறை அமைச்சர்
- Shan Siva
- 20 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 19: 2013 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் தேங்கிக்
கிடந்த 19,205 நிரந்தர வசிப்பிட நுழைவு அனுமதியான PR விண்ணப்பங்களை
உள்துறை அமைச்சகம் வெற்றிகரமாக அனுமதித்துள்ளது.
குடிநுழைவுத் துறையின் கீழ்
உள்ள சிறப்புப் பணிக்குழுவால் இந்த செயல்முறை முடிக்கப்பட்டதை உள்துறை அமைச்சர்
டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தினார்.
மொத்த நிலுவையில்
உள்ள விண்ணப்பங்களில், 15,081 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன, 4,124 நிராகரிக்கப்பட்டன.
2024 ஆம்
ஆண்டிற்காக, மொத்தம் 2,575 புதிய விண்ணப்பங்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளன, அனைத்தும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள்
தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூன்
மாதம் வரை 1,900 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக சைஃபுதீன் மேலும் கூறினார்.
செப்டம்பர்
மாதத்திற்குள் இவற்றை இறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பதிவுத்
துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது மாதத்திற்கு
சராசரியாக 300 புதிய நுழைவு அனுமதி விண்ணப்பங்களைச் செயல்படுத்த தங்களுக்கு
உதவுகிறது என்று அவர் மக்களவை கேள்வி பதில் அமர்வின் போது
கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



