வெள்ள ஆபத்து கொண்ட பகுதிகளில் 150 படகுகள் வைக்கப்படும்!

top-news
FREE WEBSITE AD

பூச்சோங், அக்.31-

வடகிழக்குப் பருவமழையின் போது மீட்புப் படையினரின் உதவியுடன் தற்காலிகமாக ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடமாற்றம் செய்ய முன்நடவடிக்கையாக சிறியளவிலான 150 படகுகளை மலேசியத் தீயணைப்பு மீட்புத் துறை வைத்துள்ளது.

அப்படகுகள் அடிக்கடி வெள்ளம் ஏற்படக்கூடிய பகாங்கின் கோல லிப்பிஸ், சிலாங்கூரின் கோல சிலாங்கூர் கோல லங்காட், டிங்கில் போன்ற முதன்மை மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.

மீட்புப் படையினர் வருவதற்கு முன்பாகப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றும்படி வலியுறுத்தித் தொடக்கக்கட்ட மீட்புப் படையினராக உள்ளூர் மக்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.எங்களின் அனுபவத்தைப் பொறுத்தவரை பேரிடர் தொடக்கக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற ஓரிடத்திலுள்ள சமூகத்தினர் முக்கிய பங்காற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களுக்கு இடங்கள், பாதைகள், மீட்க முன்னுரிமை கொடுக்க வேண்டியவர்கள் யார் என்பது நன்கு தெரியும் என்று பூலாவ் மெராந்தியில் 2025/2026க்கான வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அரசின் முன்னேற்பாட்டுக்கான செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய போது டத்தோ நோர் ஹிஷாம் முகமட் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *