பள்ளி மாணவர்களுக்கான RM 150 - பெற்றோர்களிடம் அப்படியே வழங்க வேண்டும்! - கல்வி அமைச்சர் நினைவூட்டல்
- Shan Siva
- 13 Jan, 2026
நிபோங் தெபால், ஜன 13: பள்ளி
மாணவர்களுக்கான RM150 முன்கல்வி உதவி (BAP) தொகையை எந்தவிதக் கழிவும் இன்றி முழுமையாக பெற்றோரிடம் வழங்க வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் அறிவுறுத்தியுள்ளார்.
SMK Tun Syed
Sheh Barakbah பள்ளியில்
செய்தியாளர்களிடம் பேசிய ஃபத்லினா, சில பள்ளிகள் அரசின் இந்த உதவித் தொகையை பெற்றோர்–ஆசிரியர் சங்க (PIBG) கட்டணம் உள்ளிட்ட பள்ளி சார்ந்த செலவுகளுக்குப் பயன்படுத்துவதாக
புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார்.
எந்தவிதக் கழிவும்
செய்யக்கூடாது என்று
ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார். PIBG கட்டணம் அல்லது பிற கட்டணங்கள் தனித்தனியாகவே வசூலிக்கப்பட
வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசு RM150 வழங்கினால், பெற்றோர் RM150-ஐயே பெற வேண்டும். எந்த ஆசிரியரும்
அந்த தொகையில் இருந்து கழித்தால், தன்னிடம்
தெரிவியுங்கள். அது அனுமதிக்கப்படாது என அவர் தெளிவுபடுத்தினார்.
நாடு முழுவதும் BAP திட்டத்திற்காக RM800 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் படிவம் 1 முதல் படிவம் 6 வரை உள்ள சுமார் 52 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் ஃபத்லினா கூறினார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள சுமார் 10,000 பள்ளிகளில் BAP வழங்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளதாகவும், அது இந்த வாரத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



