சிறுமி பாலியல் பலாத்காரம்! 17 வயதுக்குற்பட்ட மூவர் கைது!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 1,

கெடா PARIT BUNTAR பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 14 வயது சிறுமியைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 15 முதல் 17 வயதுக்குற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் இன்று PARIT BUNTAR Majistret நீதிமன்றத்தில் தங்கள் மீதானக் குற்றத்தை மறுத்து நீதிமன்ற விசாரணையுடன் ஜாமின் கோரிக்கையையும் முன்வைத்த நிலையில் அவர்களின் வயதை அடிப்படையாகக் கொண்டும் PARIT BUNTAR Majistret நீதிபதி ஒருவருக்குத் தலா RM 500 ரிங்கிட் ஜாமின் வழங்கியதுடன் மேலதிக விசாரணையை மேற்கொள்ளும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

கடந்த வாரம் கெரியானில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 15 முதல் 17 வயதுள்ள பள்ளி மாணவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலையில் சிறுமியின் கூச்சலிடும் சத்தம் கேட்டு பொதுமக்கள் சம்மந்தப்பட்ட 3 மாணவர்களையும் முற்றுகையிட்டு சரமாரியாகத் தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பாதிகப்பட்ட 15 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வழக்கின் விசாரணையை ஏப்ரல் மாதம் தொடர்வதாக நீதிபதி உத்தவிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *