மோட்டார் சைக்கிள் விபத்தில் 15 வயது மாணவன் பலி! மற்றொருவர் படுகாயம்!
- Thinagaren Sanggaren
- 02 Nov, 2025
நவம்பர் 2,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் ரெம்பாவ் அருகில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பின்னால் அமர்ந்திருந்த 21 வயது இளைஞர் படுகாயம் அடைந்ததாகவும் ரெம்பாவ் மாவட்டக் காவல் ஆணையர் Hasani Husein தெரிவித்தார். பிற்பகல் 3.45 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்திருப்பதாகப் பொதுமக்களிடமிருந்து புகார் பெற்றதாக Hasani Husein தெரிவித்தார். பினாங்கிலிருந்து மலாக்காவுக்கு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக் Hasani Husein தெரிவித்தார்.
உயிரிழந்தவர் பினாங்கைச் சேர்ந்த 15 வயது Neves Raj என்றும் படுகாயம் அடைந்தவர் 21 வயது S Uberan என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் KONVOIயில் ஈடுப்பட்டதாக நம்பப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் படுகாயம் அடைந்தவர் ALOR GAJAH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிகிச்சைக்குப் பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளவதாக ரெம்பாவ் மாவட்டக் காவல் ஆணையர் Hasani Husein தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்த 15 வயது மாணவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாததைக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



