கோத்தா கினபாலு பெர்சாத்து கட்சியில் இருந்து 16 நிர்வாகிகள் விலகல்
- Surendran Sumdraraj
- 07 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 7-
சபா மாநிலத்தின் கோத்தா கினபாலு பகுதியில் உள்ள பெர்சத்து (BERSATU) கட்சியின் 16 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். கட்சியின் பிரச்சினைகள் அதிகரித்து வருவது தான் இந்த முடிவுக்குக் காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சபா பெர்சத்து தகவல் பிரிவு தலைவரும், கோத்தா கினபாலு பெர்சத்து தலைவருமான சுஹைமி புவாங் (Suhaimi Buang) உட்பட 15 பேர் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அவர்கள் “கோத்தா கினபாலு நிர்வாகக் குழு கலைப்பு மற்றும் கட்சியிலிருந்து விலகல்” என்ற தலைப்பில் பிப்ரவரி 27ஆம் தேதி தேதியிட்ட கடிதத்தை பெர்சத்து பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், கட்சியின் தலைமையகம் கருத்து வேறுபாடுகளை முறையாகவும் முதிர்ச்சியுடனும் கையாளத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் சில நடவடிக்கைகள் அடிப்படை மட்டத்தில் கட்சியின் நிலைத்தன்மையைப் பாதித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனுடன், இந்த பிரச்சினைகள் சமீபத்தில் நடைபெற்ற சபா மாநிலத் தேர்தலில் (PRN Sabah) பெர்சத்து கட்சியின் செயல்திறனை பாதித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



