தாயும் சகோதரனும் குத்திக் கொலை 17 வயது இளைஞன் கைது!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, ஜூன் 13-

மலாக்கா, புக்கிட் ரம்பாயில் தன்னுடைய தாயையும் மூத்த சகோதரனையும் கத்தியால் குத்திக் கொன்ற பதினேழு வயது இளைஞனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.நேற்று அதிகாலையில் அவர்களின் வீட்டில் அக்கொலைகள் நடந்தன என்று மலாக்கா போலீஸ் தலைவர் ஸூல்கைரி முக்தார் தெரிவித்தார்.

சீனப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த 51 வயதான பெண்ணும் இருபத்தோரு வயதான அவருடைய மகனும் பல கத்திக் குத்துக் காயங்களுடன் வீட்டின் வரவேற்பறையில் இறந்து கிடந்தனர். சந்தேகப் பேர்வழியின் பதின்மூன்று வயதான மற்றொரு சகோதரன், ரத்தக் காயங்களுடன் வீட்டின் கார்நிறுத்தும் பகுதியில் காணப்பட்டான் என்று ஸூல்கைரி சொன்னார்.

படிப்பில் கவனம் செலுத்தும்படி நெருக்குதல் கொடுக்கப்பட்ட காரணத்தால் அந்தப் பதினேழு வயது இளைஞன், மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.அந்த இளைஞன் படுக்கையறையில் இருந்த தனது தாயாரை சரமாரியாக குத்தியுள்ளான். அதனைத் தடுக்க முயன்ற தனது அண்ணனையும் அவன் குத்தியுள்ளான். அவர்கள் இருவரும் அங்கேயே மரணமடைந்தனர்.

அந்நேரத்தில். படுக்கையறைக்கு வந்த தன்னுடைய தம்பியை அங்கிருந்து வெளியே
போகும்படி அவன் கூறியிருக்கிறான். ஆனால், வெளியே போக மறுத்ததால், அவனையும் அந்த இளைஞன் தாக்கியிருக்கிறான். கடுமையான காயங்களுக்கு ஆளானபோதிலும், அச்சிறுவன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தான். அண்டை வீட்டுக்காரர்களால் அவன் காப்பாற்றப்பட்டான் என்று ஸூல்கைரி குறிப்பிட்டார்.

Seorang remaja lelaki berusia 17 tahun ditahan selepas menikam ibu dan abang kandungnya hingga mati di rumah mereka di Bukit Rambai, Melaka. Adik lelakinya yang berusia 13 tahun turut cedera dalam kejadian berpunca daripada tekanan akibat nasihat pelajaran.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *