ஆபாச வீடியோக்கள் மூலம் RM 76,000 சம்பாதித்த 17 வயது இளைஞன்!
- Shan Siva
- 24 Oct, 2025
கோலாலம்பூர், அக் 24: நாடு தழுவிய அளவில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான (CSAM) நடவடிக்கையில் 6 சிறுவர்கள் உட்பட 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
.செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 30 வரை நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட 37 சோதனைகளில் 8,80,000 க்கும் மேற்பட்ட ஆபாசப் பொருட்கள், காணொளிகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நடவடிக்கையில்
(CSAM) கைது செய்யப்பட்ட 17 வயது மாணவர் ஒருவர், ஆபாச வீடியோக்களை ஆன்லைனில் விற்று ஒன்பது மாதங்களில் RM76,000 சம்பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
காவல்துறைத்
தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் இதை இளைஞர்களிடையே ஒழுக்கச் சரிவு
மற்றும் டிஜிட்டல் லாப வெறியின் கவலைக்குரிய அறிகுறி என்று விவரித்தார்.
ஒவ்வொரு
வீடியோவையும் அணுக இளைஞர் குறைந்தபட்சம் RM30 வசூலித்து வந்ததாக அவர் ஒரு
செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



