17 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பேருந்துடன் மோதி மரணம்!
- Muthu Kumar
- 14 Nov, 2025
ஜார்ஜ் டவுன், நவ 14:
பினாங்கும் ஜார்ஜ் டவுன் முத்தியாரா லைன் எல்ஆர்டி கட்டுமான தளத்திற்கு முன்னால் உள்ள மேம்பாலம் அருகே, துன் டாக்டர் லிம் சோங் யூ எக்ஸ்பிரஸ்வேயில், 17 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பேருந்துடன் மோதியதில் நேற்று உயிரிழந்தார்.
நண்பகல் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் அப்துல் ரோசாக் முஹம்மது, தெரிவித்தார். காலை 11 மணியளவில், பாதிக்கப்பட்டவர் கேட் லெபு மெக்காலமில் இருந்து சம்மர் பிளேஸ், பெர்சியாரன் கர்பால் சிங்கில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் பாதை மாறி மேம்பாலம் அருகே தனது இடது பாதையில் நேராகச் சென்ற பேருந்துடன் மோதியதாக நம்பப்படுகிறது. இந்த மோதலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



