தடுப்பு மையங்களில் 17,896 ஆவணமற்ற அந்நியக் குடியேறிகள்! - உள்துறை அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 12: ஜூலை 6 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள குடியேற்ற தடுப்பு மையங்களில் மொத்தம் 17,896 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 10% க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதிலில், அனைத்து குழந்தைகளும் குறைந்தது ஒரு பெற்றோருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 90% க்கும் அதிகமானோர் மியன்மார், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு குடியேற்ற தடுப்பு மையத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை குறித்த சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானின் கேள்விக்கு சைஃபுடின் இவ்வாறு பதிலளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *