இந்தியாவில் 17 கோடி வாகனங்களின் பதிவு ரத்தாகும் அபாயம்!
- Muthu Kumar
- 17 Jan, 2026
இந்தியச் சாலைகளில் இயங்கும் 40.7 கோடி வாகனங்களில் சுமார் 70% போக்குவரத்து விதிகளை மீறியுள்ளன என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, முறையான ஆவணங்கள் இல்லாத 17 கோடி வாகனங்களின் பதிவைப் படிப்படியாக ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அதிரடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மத்திய அரசின் பரிந்துரைப்படி, வாகன ஆவணங்களைச் சரிசெய்யத் தவறுபவர்கள் மீது பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.தகுதிச் சான்றிதழ் (Fitness), காப்பீடு (Insurance) மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) ஆகியவற்றை ஓராண்டுக்குள் புதுப்பிக்காத வாகனங்கள் 'தற்காலிகப் பதிவு நீக்கம்' (Temporary De-registration) செய்யப்படும். ஆவணங்கள் இன்றி தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இருக்கும் வாகனங்கள் 'நிரந்தரமாகப் பதிவு நீக்கம்' செய்யப்படும்.
நிரந்தரமாக நீக்கப்பட்ட வாகனங்களை மீண்டும் இயக்கக் போக்குவரத்து ஆணையரின் சிறப்பு அனுமதி மற்றும் நீதிமன்ற உத்தரவு போன்ற விதிவிலக்கான சூழல்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.தமிழ்நாடு, கர்நாடகா, பீகார் சுமார் 40% தெலங்கானா 20% (மிகக் குறைவு)
இந்தத் திட்டத்தின் வெளிப்படைத் தன்மைக்காக அனைத்து விவரங்களும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



