அனுமதி இன்றி வைத்திருந்த RM 185,515 மதிப்புடைய அழகு சாதனப் பொருள்கள் & உணவு சப்ளிமெண்ட்ஸ் பறிமுதல்!
- Shan Siva
- 21 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 21: சுகாதார அமைச்சின் ஒப்புதல் இல்லாமல் சமூக ஊடக தளங்களில்
விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு அழகுசாதனப் பொருட்கள் மற்றும்
உணவு சப்ளிமெண்ட்ஸ் போன்றவை,
ஜூலை 16 அன்று சிகாம்புட்டில் உள்ள இரண்டு இடங்களில் நடந்த சோதனைகளில் போலீசாரால்
பறிமுதல் செய்யப்பட்டன.
முதல் வளாகத்தில்
நடந்த சோதனையில் 28 முதல் 30 வயதுக்குட்பட்ட ஓர் ஆணும் இரண்டு வெளிநாட்டுப்
பெண்களும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும்
பொது ஒழுங்குத் துறை இயக்குநர் அஸ்மி அபு காசிம் கூறினார்.
அமைச்சின் ஒப்புதல் இல்லாத 1,972 பெட்டிகள் மற்றும் பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள், 2,551 உணவு
சப்ளிமெண்ட்ஸ் பாட்டில்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த வளாகத்தின்
உரிமையாளரான 40 வயது நபரின் மற்றொரு
வீட்டில் அமைச்சின் ஒப்புதல் இல்லாமல் 180 பெட்டிகள் மற்றும் 895 பாட்டில்கள்
அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உணவு சப்ளிமெண்ட்ஸ் இருப்பதைக் கண்டனர் என்று அஸ்மி அபு காசிம் தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதல் ஜூலை
16 வரை பல்வேறு
குற்றங்களுக்காக போலீசார் 167 சோதனைகளை நடத்தி
300 பேரை கைது
செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



