போதைப்பொருள் தவறுகள்: 324 போலீஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

top-news

கோலாலம்பூர், பிப். 27-

போதைப்பொருள் தவறுகளில் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட 324 மலேசிய அரசுப் போலீஸ் (PDRM) அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சர் சைபுடின் நசூ தெரிவத்தார்.

2020 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 (Akta Dadah Berbahaya 1952) கீழ் மொத்தம் 1,869 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 91 அதிகாரிகளும் 1,778 கீழ்நிலை பணியாளர்களும் அடங்குவர்.

இந்த எண்ணிக்கையில் 958 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மீதமுள்ள 911 பேர் மீது விசாரணை மற்றும் நீதிமன்ற நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில வழக்குகளில் உடற்கூறு மற்றும் இரசாயன ஆய்வு அறிக்கைகள் கிடைக்க வேண்டிய நிலையில் இருப்பதால், விசாரணை நிறைவு பெற காத்திருக்கின்றது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *