தங்கும் விடுதியில் தகாத உறவிலிருந்த 33 பேர் கைது!
- Thinagaren Sanggaren
- 02 Jan, 2026
ஜனவரி 2,
பினாங்கில் உள்ள தங்கும் விடுதிகளில் தகாத உறவுகளில் ஈடுபட்ட 18 தம்பதிகளை மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறை கைது செய்துள்ளது. புத்தாண்டின் முதல் நாள் இரவு Ops Ambang எனும் நடவடிக்கையை மேற்கொண்ட JHEAIPP எனும் பினாங்கு மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறை 17 பெண்களையும் 16 ஆண்களையும் கைது செய்துள்ளது. பினாங்கின் மத்திய Seberang Perai, வடக்கு Seberang Perai, Timur Laut, Barat Daya என 4 மாவட்டங்களில் உள்ள 8 தங்கும் விடுதிகளில் இச்சோதனையை மேற்கொண்டதாகப் பினாங்கு மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறை இயக்குநர் Muhamad Helmi Rosley தெரிவித்தார்.
சுமார் 100க்கும் மேற்பட்டவர்களைச் சோதனையிட்டதாகவும் திருமணமாகாத 18 தம்பதிகளையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களில் சிலர் வெளிநாட்டினர்கள் என்றும் பினாங்கு மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறை இயக்குநர் Muhamad Helmi Rosley தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 33 பேரும் மற்றவர்களுடன் திருமணமானவர்கள் என்றாலும் காதலர்களுடன் தங்கும் விடுதியில் தங்கியிருந்த குற்றத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பினாங்கு மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறை இயக்குநர் Muhamad Helmi Rosley விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



