19 வயது பெண்ணைக் காணவில்லை!

- Muthu Kumar
- 15 May, 2025
குவா மூசாங், மே 15:
இந்த வார தொடக்கத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் 19 வயது பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது.
மே 12 அன்று மாலை 5.24 மணியளவில் இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறைக்கு புகார் கிடைத்ததாக குவா முசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் Sik Choon Foo கூறினார்.தனது மகள் நர்ஃபிஃபி எசாட்டி எட்ரியானா ரோஸ்லி வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அதன் பின்னர் திரும்பி வரவில்லை என்றும் அப்பெண்ணின் தந்தை பெர்தாம் காவல் நிலையத்தில் புகாரளித்ததாக அவர் கூறினார்.
தனது மகளைத் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததாக அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.தகவல் தெரிந்த பொதுமக்கள் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்!
Seorang remaja perempuan berusia 19 tahun, Norfify Esyati Edriana Rosli, dilaporkan hilang selepas keluar dari rumah pada 12 Mei. Polis memohon bantuan orang ramai untuk mengesan mangsa setelah semua usaha menghubunginya gagal.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *