பினாங்கு தைப்பூசத்திற்கு 10 லட்சம் பேர் திரள்வார்கள்! - டாக்டர் ஆர்.லிங்கேஸ்வரன்
- Shan Siva
- 05 Jan, 2026
பினாங்கு, ஜன 5: வரவிருக்கும் தைப்பூச விழாவையொட்டி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பினாங்கு இந்து அறநிலைய வாரிய துணைத் தலைவர் டாக்டர் ஆர். லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த ஆண்டு சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை விழா நடைபெறுவதால், பிப்ரவரி 1-ஆம் தேதி கூட்டம் உச்சத்தை எட்டும் என அவர் கூறினார். சென்னை–பினாங்கு நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால், இந்தியாவிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தை அடைய, சிறப்பு போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 60 பேர் இந்த சேவையின் மூலம் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



