1 மாத மின்சாரக் கட்டணம் தள்ளுபடி! - TNB

- Shan Siva
- 03 Apr, 2025
சுபாங் ஜெயா, ஏப்ரல் 3: புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாத மின்சார கட்டண தள்ளுபடியை தெனாகா நேஷனல் பெர்ஹாட்
அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, கிடைக்கக்கூடிய உதவியில் பாதிக்கப்பட்ட
வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான மறு இணைப்பு கட்டணங்கள் (தள்ளுபடி) மற்றும்
தற்போதைய பில்களுக்கு தாமதமாக செலுத்தும் கூடுதல் கட்டணம் எதுவும் இருக்காது TNB இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனது
வாடிக்கையாளர்களுக்கு ஆதரவை வழங்க வசதியாக, காவல் துறை செயல்பாட்டு அறைக்கு அருகில் ஒரு சேவை
கவுண்டரைத் திறந்துள்ளதாகவும் TNB தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
மேலும் தகவலுக்கு TNB இன்
வாடிக்கையாளர் உறவுகள் தலைவரை 012-6060954 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப TNB அதன் உதவி முயற்சிகளை அவ்வப்போது மதிப்பீடு செய்யும் என்று அது கூறியது!
Tenaga Nasional Berhad (TNB) mengumumkan diskaun bil elektrik selama sebulan kepada mangsa kebakaran di Putra Heights. TNB juga menawarkan pengurangan caj sambungan semula elektrik dan tidak mengenakan caj lewat untuk bil semasa. TNB akan menghubungi pelanggan untuk menyediakan bantuan selanjutnya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *