மலேசிய வெற்றிகள் கேள்விக்குறியாகிறதா?

top-news

கோலாலம்பூர், செப். 27-

செய்தி-வெற்றி மைந்தன்

மலேசியாவின் ஹரிமாவ் மலாயா அணிக்காக விளையாடிய ஏழு வாரிசு வீரர்கள் - கேப்ரியல் பால்மெரோ, பகுண்டோ கார்சஸ், ரோட்ரிகோ ஹோல்காடோ, இமானோல் மச்சுக்கா, ஜோவோ பிகியூரேடோ, ஜான் இராசபால், ஹெக்டர் ஹெவல் - ஆகியோருக்கு எதிராக அனைத்துலக கால்பந்து சம்மேளனம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் ஆவணங்களைப் புனைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளததைத் தொடர்ந்து இந்த ஏழு வீரர்களும் 2027 ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் பங்கேற்ற நேபாளத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதுடன், வியட்நாமை 4-0 என்ற கணக்கில் தோற்கடித்து குழு எப்பில் முன்னிலை பெற்ற வெற்றி ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ வின்ட்சர் பால் ஜான், இது குறித்து முடிவெடுப்பது மிகவும் முன்னதாக உள்ளது என்று கூறினார். பிபா இந்த ஆவணப் புனைப்பு விவகாரம் தொடர்பாக தற்போது தான் முடிவு வெளியிட்டுள்ளதாகவும், மேலும் ஆய்வு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *