KLIA 2 - மின் உள்கட்டமைப்பை மறு வடிவமைப்பு செய்ய வேண்டும்! போக்குவரத்து அமைச்சர் அறிவுறுத்து
- Shan Siva
- 17 Sep, 2025
புத்ராஜெயா, செப் 19: KLIA முனையம் 2 இல் உள்ள மின் உள்கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்ய மலேசிய விமான
நிலைய நிறுவனமான MAHB-யிடம் கூறப்பட்டுள்ளது. இதனால் மேலும்
மின் தடை ஏற்படும் அபாயத்தை நீக்க முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்
இன்று தெரிவித்தார்.
மின் தடை விமான
நிலைய செயல்பாடுகளை பாதிக்கவில்லை என்றாலும், மின்சாரத்தை மீட்டெடுக்க 28 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது என்று
லோக் அப்போது கூறினார்.
KLIA இல் உள்ள முழு
மின் உள்கட்டமைப்பையும் மறுபரிசீலனை செய்ய MAHB-க்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், இன்று, விமான நிலைய
ஆபரேட்டரிடமிருந்து மின் தடை குறித்த முழு அறிக்கையைப் பெற்றதாக லோக் கூறினார்.
மின் தடை மீண்டும் ஏற்படாதவாறு MAHB அதன் மின் உள்கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என்று அவர் மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAAM) புதிய நிறுவன அடையாளத்தை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



